வெகு நாட்கள் கழித்து ஒரு அருமையான சினிமா பார்த்த அனுபவம். வாகனம் ஓட்டக்கூடிய அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சாலை பாதுகாப்பு பற்றி ஆயிரம் விழிப்புணர்வுகள் இருந்தாலும் அதை ஒரு சினிமாவாக எடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள். ஒரு கோர விபத்துக்கு பின்னால் எத்தனை எதிர்பார்ப்புகள், ஆசைகள், கனவுகள் சிதைக்கப்படுகிறது என்பதை சிறப்பாக காட்டியுள்ளார் இயக்குனர். நடிகர், நடிகையரின் யதார்த்தமான நடிப்பு மற்றும் திரைகதை படத்திற்கு வலுசேர்த்துள்ளது. இரண்டு அருமையான காதல் கதைகள் சில யாதார்த்தமான காதல் இலக்கணங்களை கற்று தருகிறது. உண்மையில் இது சாதரண படம் அல்ல ஒரு நல்ல பாடம்...
#உலகிலே சாலைவிபத்துக்கு அதிக உயிர்களை பலி கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 15 பேர் பலியாகி வருகின்றனர். இந்தியாவில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதே காரணம்.
இந்தியாவில் விஞ்ஞானபூர்வமான சாலை பாதுகாப்பு முறைகள் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்பது வருந்தக்கூடியது.
சாலை விதிகளை மதிப்போம் - உயிர் காப்போம்
$ சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
$ தலைக்கவசம் உயிர் கவசம்
$ வேகம் விவேகம் அல்ல
$ மெதுவாக செல்லுங்கள் ரோட்டில் மனைவி காத்திருப்பால் வீட்டில்...

No comments:
Post a Comment